Adiyogi – Shivan Yogathin Moolam (Tamil eBook)

சிவன், சமயத்தை உணர்த்தவில்லை. பொறுப்புணர்வை உணர்த்துகிறார். நம் வாழ்வின் தன்மையை நம் கைகளில் எடுத்துக் கொள்ளும் திறமையை உணர்த்துகிறார்.
– சத்குரு

“ஷி-வா” என்றால் “எது இல்லையோ அது,”ஆதி வெற்றிடம். இந்த வெற்றிடத்தை முழுமையாய் உணர்ந்த ஆதியோகியும் சிவனே. ஆதியோகி, தொன்மத்தின் அடையாளமாய், வரலாற்றுச் சின்னமாய், வாழும் உண்மையாய், படைப்பவராய், அழிப்பவராய், விதிகளை மீறியவராய், சந்நியாசியாய், பிரபஞ்ச நடனம் நிகழ்த்துபவராய்,தீராக் காதலராய், இவை எல்லாமுமாய் ஒரே நேரத்தில் திகழ்கிறார்.

இந்தப் புத்தகம், ஆதியோகிக்கு வாழும் யோகி ஒருவரின் அர்ப்பணிப்பாய், இதற்குமுன் ஆவணப்படுத்தப்படாத அரிய களஞ்சியமாய் திகழ்கிறது. இதில் அறிவியலும் தத்துவமும் கை கோர்க்கின்றன. ஒலியும் மௌனமும் சங்கமிக்கின்றன.

முன்பின் அறிந்திராத வகையில் ஆதியோகி பற்றி பேசப்படாத உண்மைகள் இந்நூலில் கேள்வி பதில்களாய், சிந்தனை அலைகளாய் எழும் மகத்துவம், வாசகரை பரவசத்தில் ஆழ்த்தி முற்றிலும் வேறொரு பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும்.